இ-பாஸ் கட்டாயம் ரத்து செய்ய வேண்டும்..சு.திருநாவுக்கரசர் வலியுறுத்தல்.!

இ-பாஸ் கட்டாயம் ரத்து செய்ய வேண்டும்..சு.திருநாவுக்கரசர் வலியுறுத்தல்.!

இ-பாஸ் கட்டாயம் என்பதை ரத்து செய்ய வேண்டும் எனஎம்.பி காங்கிரஸ் எம்.பி சு.திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,  மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோர் அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் மூலம் அனுமதி பெறவேண்டும் என்கிற இ-பாஸ் செயல்முறை இந்தியா முழுவதும் மத்திய அரசால் நீக்கப்பட்டுவிட்டது.

தமிழ்நாட்டில் தொடரும் இந்த திட்டத்தால் பொதுமக்களுக்கு காலதாமதம், இடையூறுகள், வீண் மன அழுத்தம் போன்ற தேவையில்லாத சிரமங்கள் ஏற்படுகின்றன. திருமணம், இறப்பு மருத்துவம் உள்ளிட்ட முக்கிய தேவைகளுக்காக செல்வோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர். ஹோட்டல்கள், சுற்றுலா போன்றவை செயல்படாத நிலையில் அனாவசியமாக யாரும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல போவதில்லை. அதுவும் சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களிலும் இன்னமும் தொடர்ந்து கட்டுப்படுத்தப்படாமல் பரவிவரும் கொரோனா தொற்றால் மக்கள் பீதியிலும் பயத்திலும் உள்ளனர்.

தேவையில்லாத பயணங்களை அவசியமின்றி யாரும் குறிப்பாக குடும்பங்களோடு செய்யப்போவதில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பல்வேறு அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் இது குறித்து தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இவற்றை கருத்தில் எடுத்துகொண்டு தமிழக அரசு மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லுவதற்கான தடையை ரத்து செய்வதற்கு தமிழக முதலமைச்சர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

author avatar
murugan
Join our channel google news Youtube