“தமிழகத்தில் இ- பாஸ் முறை ரத்து செய்யப்படுமா? விரைவில் முதல்வர் அறிவிப்பார்”- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

தமிழகத்தில் இ- பாஸ் முறை ரத்து செய்வது குறித்த அறிவிப்பை விரைவில் முதல்வர் அறிவிப்பார் என வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்

சென்னை, திருவிக நகரில் கொரோனா பரிசோதனை மையத்தை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து, அங்கு காய்ச்சல் பரிசோதனை சிறப்பு மருத்துவ முகாமில் ஆய்வு செய்த பின், பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை வழங்கினார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா தொற்றிலிருந்து அதிகரித்துள்ளதாகவும், கொரோனாவுக்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், இதய நோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோயாளிகளுக்குப் பாதிப்பு ஏற்படும்போது அவர்களுக்குச் சிகிச்சை அளிப்பது மருத்துவர்களுக்கு சவாலாக இருப்பதாகவும், கொரோனாவுக்கு ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக்கூடாது என அதிக கவனம் செலுத்தி வருவதாக கூறினார்.

மேலும், தமிழகத்தில் இ- பாஸ் முறை ரத்து செய்வது குறித்து மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுத்து வருகிறதாகவும், இதுகுறித்து கள ஆய்வுகளை முதல்வர் மேற்கொண்டு வருவதாகவும், இதுகுறித்த அறிவிப்பை விரைவில் முதல்வர் வெளியிடுவார் என தெரிவித்துள்ளார்.