ஓய்வு பெரும் வயது உயர்வுக்கு கண்டனம்.! சமூக இடைவெளியுடன் DYFI உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்.!

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தியதை கண்டித்து சமூக இடைவெளியுடன் தூத்துக்குடி மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கதிதினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

சமீபத்தில் தமிழக அரசானது அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயதை 59ஆக அதிகரித்து உத்தரவிட்டது. அரசின் இந்த முடிவுக்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வலுத்தன. இதுகுறித்து பலரும் தங்கள் கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிபிஎம் அலுவலகத்தில், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தியதை கண்டித்து சமூக இடைவெளியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டமானது இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தூத்துக்குடி மாவட்ட செயலாளர் M.S.முத்து தலைமையில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட குழு உறுப்பினர் ஆசாத், மாநகர தலைவர் காஸ்ட்ரோ, மாணவர் குழு உறுப்பினர்களான ராம்குமார், ஜேம்ஸ், ராஜ்குமார். கார்த்தி, விஜய் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். சமூக இடைவெளியை பின்பற்றி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.