துக்ளக் தர்பாரில் மக்கள் செல்வனுடன் இணைந்த மற்றுமொரு முன்னணி நடிகை!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது,  லாபம், சங்கத்தமிழன், கடைசி விவசாயி என பல படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை அடுத்து முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க உள்ளார். இதற்க்கு பயிற்சி எடுத்து ஷூட்டிங் ஆரம்பிக்க சில மாதங்கள் ஆகும் என்பதால் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி ஷூட்டிங் கிளம்பிவிட்டார்.

விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படம் துக்ளக் தர்பார். இந்த படத்தை டெல்லிபிரசாத் தீனதயாளன் இயக்க உள்ளார். இப்படத்தில் பார்த்திபன், அதிதி ராவ் ஹைதரி என முக்கிய நட்சத்திரங்கள் நடிக்க, தற்போது அதிதியை தொடர்ந்து படத்தில் இன்னொரு ஹீரோயினாக மஞ்சிமாமோகன் நடிக்க தற்போது ஒப்பந்தனமாகியுள்ளார்.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.