,

தொடரும் மழை… வேலூர், ராணிப்பேட்டை உட்பட 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.!

By

school leave

தொடரும் மழை காரணமாக, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் , செங்கல்பட்டு என பல்வேறு பகுதிகளில்  இரவு தொடங்கிய மழை, பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் தொடர்ந்து பெய்து வந்தது. காலை வரை மழை தொடர்ந்ததால் மேற்கண்ட 4 மாவட்டங்களுக்கு பள்ளிகளிக்கு மட்டும் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்தனர்.

தற்போது வேலூர், ராணிப்பேட்டை பகுதிகளிலும் மழை தொடர்வதால், அந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளிலும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். இருந்தாலும், மேற்கண்ட 6 மாவட்டங்களிலும் 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதுபவர்களுக்கு இன்று அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்ட்டுள்ளது.