நண்பா நாங்களும் உங்க ரத்த சொந்தம் தான் – நெகிழ வைக்கும் பாகிஸ்தான் நெட்டிசன்களின் ஹேஷ்டேக்!

இந்தியாவில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு உதவுமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிடம் சமூக வலைத்தளம் மூலமாக #indianeedsoxygen எனும் ஹேஷ்டேக் மூலம்  நெட்டிசன்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வரும் நிலையில், கடந்த வருடத்தை விட இந்த வருடம் கொரோனாவின் தாக்கம் அதிக அளவிலேயே காணப்படுகிறது. பாதிப்பு உச்சத்தை தொட்டு வரும் நிலையில், மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் தினமும் பாதிக்கப்படுவதுடன், ஆயிரத்துக்கும் அதிகமானோர் தினமும் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். மேலும்,  இந்தியாவில் உள்ள வட மாநிலங்கள் பலவற்றில் ஆக்சிஜன் தட்டுப்பாடு மற்றும் மருத்துவமனையின் அத்தியாவசிய தேவைகள் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவிற்கு ஆதரவாக இருக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அந்நாட்டு இணையவாசிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். எல்லையில்  பிரச்சனைகள் இருந்தாலும் அதை கருத்தில் கொள்ளாமல், #indianeedsoxygen எனும் ஹேஷ்டேக்குடன் சமூக வலைத்தளம் மூலமாக கோரிக்கை விடுத்தது வருகின்றனர் பாகிஸ்தான் சொந்தங்கள்.

மனிதாபிமான அடிப்படையில் இந்தியாவுக்கு உதவ நாங்கள் தயார் என பாகிஸ்தானில் செயல்படும் அப்துல் சத்தார் தன்னார்வ அமைப்பும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது. மேலும் பாகிஸ்தானியர்கள் நாங்க உங்கள் ரத்த சொந்தம் தான், நாங்கள் உங்களுடன் எப்பொழுதும் துணையாக இருப்போம் எனவும் தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

author avatar
Rebekal