குடிபோதையில் விளம்பரப் பலகையில் புஷ்-அப் செய்த நபர்…வைரலாகும் வீடியோ.!!

By

ViralVideo

மது போதையில் ஒரு நபர் தனது முழு சுயநினைவையும் இழக்கிறார் என்றே கூறலாம். சிலர் எவ்வளவு சொன்னாலும் பரவாயில்லை, எதையும் கண்டுகொள்ளாமல், தொடர்ந்து மதுவை குடித்துக்கொண்டு மதுவுக்கு அடிமையாகி வருகிறார்கள். போதையில் அவர்கள் எல்லாவிதமான வித்தியாசமான செயல்களையும் செய்கிறார்கள்.

குடித்துவிட்டு ஒரு மனிதன் காளையின் மீது சவாரி செய்வதும், தெலுங்கானாவைச் சேர்ந்த மற்றொரு நபர் குடிபோதையில் விளம்பரப் பலகையில் தொங்குவது போன்ற வீடியோக்களை நீங்கள் பார்த்திருக்கலாம். அந்த வீடியோக்களுடன் சேர்த்து, ஒரு நபர் விளம்பரப் பலகையில் புஷ்-அப் செய்யும் வீடியோவை பார்த்திருக்கீறிர்களா..?

அப்படி ஒரு நபர் குடிபோதையில் புஷ்-அப்  செய்யும் வீடியோ தான் சமூக வலைத்தளங்களில் வைராகி வருகிறது. அந்த நபர் புஷ் – அப் செய்வதை கீழே இருந்து மக்கள் பார்த்தார்கள். வீடியோவை பார்த்த பலரும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவே கூறி வருகிறார்கள்.

இதைப்போலவே, கடந்த சில நாட்களுக்கு முன்பு குருகிராமில் ஓடும் காரின் மேல் ஒருவர் அமர்ந்து மது குடித்துக்கொண்டு புஷ்-அப் செய்யும் வீடியோக்கள் சில இணையத்தில் மிகவும் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.