ரூ.5.75 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்..! நைஜீரிய பெண் கைது..!

நைஜீரிய நாட்டை சேர்ந்த பெண்மணியிடம் ரூ.5.75 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

தமிழக முழுவதும் போதைப் பொருள் விற்பனை கட்டுப்படுத்த காவல்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி தாம்பரம் மாநகர காவல் நிலைக்குட்பட்ட பகுதியில் போதை பொருள் விற்பனை கட்டுப்படுத்த ஆணையாளர் ரவிச்சந்திரன் தலைமையில் மூன்று தனி படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கனத்தூர் சுங்கச்சாவடி அருகே பள்ளிக்கரணை மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் சரவணன் ஈடுபட்டு இருந்தபோது ஆட்டோவில் வந்த வெளிநாட்டு பெண்மணி ஒருவர் அங்கிருந்த ஒரு நபரிடம் சிறு பொட்டலத்தில் வழங்கி உள்ளார். இதனை பார்த்த போலீசார் சந்தேகம் அடைந்து பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அப்பெண் நைஜீரிய நாட்டை சேர்ந்த பெண்மணி என்பது தெரியவந்துள்ளது.

கடந்த 9 மாதங்களாக இந்த தொழில் செய்து வந்தது தெரியவந்துள்ள நிலையில், அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment