போக்குவரத்து விதிகளை மீறினால் ஓட்டுநர் உரிமம் ரத்து – எங்கு தெரியுமா?

போக்குவரத்து விதிகளை மீறுவது தான் தற்பொழுதைய நெருக்கடியான மக்கள் தொகை கொண்ட நேரத்தில் விபத்துகளை ஏற்படுத்துகிறது. எனவே போக்குவரத்துக்கு விதிகளை மீறினால் இனிமேல் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என ஹரியானா போக்குவரத்துக்கு துறை அறிவித்துள்ளது. 

தற்பொழுதைய நவீன காலகட்டத்தில் வாகனங்கள் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்வதை விட, வீட்டுக்கு குறைந்தது இரண்டு மூன்று வாகனங்களாவது உபயோகிக்கும் அளவுக்கு பொருளாதாரமும், மக்களின் வாழ்க்கை தரமும் உயர்ந்துள்ளது என்று தான் சொல்லியாக வேண்டும். தங்கள் வேலைகளை எளிமையாக்கி கொள்ள அருகிலுள்ள கடைகளுக்கு கூட வாகனங்களில் மக்கள் சென்று வருவதால் வாகன நெருக்கடி அதிகரித்து, போக்குவரத்துக்கு விதிமீறல்கள் அரங்கேறுவதுடன், சாலை விபத்துகளும் அதிகம் ஏற்படுகிறது.

சில இடங்களில் மட்டுமே நெருக்கடியால் சாலை விபத்து ஏற்படுகிறது. மற்றபடி அதிகமாக போக்குவரத்துக்கு விதிமீறல்கள் தான் விபத்துக்கு முழு காரணமாக அமைகிறது. தற்பொழுது போக்குவரத்துக்கு விதிமீறல்கள் மற்றும் நெருக்கடியை கட்டுப்படுத்த சாலையோரங்களில் நிற்கும் போக்குவரத்துக்கு காவல் துறையினர் தங்களால் இயன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் ஒன்றாக ஹரியானா மாநிலத்தில் தற்பொழுது அதிரடியான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இனி போக்குவரத்துக்கு விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு போக்குவரத்துக்கு விதிகளை மீறுபவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், போக்குவரத்துக்கு விதிகளை கடைபிடித்து வாகனம் ஓட்டும் குடும்பஸ்தர்கள் மற்றும் வயதானவர்களுக்கு நிம்மதி அளிக்கும் செய்தியாக தான் இருக்கும். ஹரியானா மாநிலம் குருகிராம் நகர காவல் துறையினரின் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு தற்காலிகமானது அல்ல எனவும், இது நிரந்தரமான ஒன்று எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து நகர துணை காவல் ஆணையர் ப்ரீத் பால் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்பொழுது போக்குவரத்துக்கு விதிமீறல்களும், அதனால் ஏற்படும் சாலை விபத்தும் அதிகரித்துள்ள நிலையில் இனி தவறு செய்பவர்களை களையெடுக்கும் விதமாக போக்குவரத்துக்கு விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களின் வாகன ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

author avatar
Rebekal