குடிநீர், ஏர் கூலர், படம் பார்க்க மானிட்டர்.. அசத்திய ஆட்டோ டிரைவர்..!

குடிநீர், ஏர் கூலர், படம் பார்க்க மானிட்டர்.. அசத்திய ஆட்டோ டிரைவர்..!

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் வசித்து வருபவர் சத்தியவான் கீதே. இவர் அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரின் ஆட்டோவில் பயணிக்க அங்குள்ள மக்கள் மிகவும் விரும்புவார்கள். ஏனெனில், அவர் தனது ஆட்டோவில் பல வசதிகளை செய்துள்ளார்.
அதில், மொபைல் போன் சார்ஜ் செய்வதற்கான ஹோல்டர், டெஸ்க்டாப் கணினி வசதி, குடிப்பதற்கு குடிநீர், முகம் மற்றும் கை கழுவுவதற்கான வாஷ் பேசின் மற்றும் கூலர் உள்ளிட்ட வசதிகளை அமைத்துள்ளார். மேலும், இதற்க்கு அவர் எந்த விதமான கட்டணமும் வசுலிப்பதில்லை. இதனால் பயணிகள் இவரது ஆட்டோவில் பயணிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Image result for Auto driver dont charge senior citizens for rides"
மேலும் இவர், தனது ஆட்டோவில் ஒரு குட்டி மானிட்டரையும் வைத்துள்ளார். அதன்மூலம் பயணிகள் படம் மற்றும் பாடல்கள் கேட்டுக்கொண்டே பயணிக்கலாம். மேலும் அவர், மூத்த குடிமக்களுக்கு ஒரு கீ.மீ. வரை கட்டணம் வசூலிப்பதில்லை.
மேலும், இதுகுறித்து சத்யவான் செய்தியாளர்களிடம் கூறுகையில், “எனது ஆட்டோவில் செல்போன் சார்ஜ் செய்யும் வசதி, சுத்தமான குடிநீர், வாஷ் பேசின் போன்ற அனைத்து வசதிகளும் உண்டு. மேலும், மூத்த குடிமக்களுக்கு ஒரு கீ.மீ. வரை கட்டணம் வசூலிப்பதில்லை. பயணிகளுக்காக சிறப்பான சேவையை வழங்கும் நோக்கத்தோடு இதனை செய்துள்ளேன் என கூறினார்.

Join our channel google news Youtube