உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க இதை குடிங்க!

நமது உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

இன்று நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சத்தான உணவுகளை விட, மேலை நாட்டு உணவுகளான பாஸ்ட் புட் உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகின்றோம். இந்த உணவுகள் நமது நாவுக்கு ருசியை கொடுத்தாலும், உடல் ஆரோக்கியத்தை எந்த விதத்திலும் மேம்படுத்துவதாக அமையாது.

தற்போது இந்த பதிவில், நமது உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்ய இயற்கையான முறையில் என்ன செய்யா வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

பீட்ரூட்

பொதுவாகவே உடலில் இரத்தம் குறைவாக உள்ளவர்களை, மருத்துவர்கள் பீட்ரூட் சாப்பிட சொல்லி ஆலோசனை வழங்குவதுண்டு. இந்த பீட்ரூட்டில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய சத்துக்கள் உள்ளதோடு, நமது உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்யும் ஆற்றலும் உள்ளது.

முதலில் பீட்ரூட்டை எடுத்து, பாதியாக வெட்டி, முதல்நாள் இரவு அதற்கு ஏற்றவாறு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின் பீட்ரூட் தண்ணீரை காலை எழுந்தவுடன், தண்ணீரை நன்கு வடிகட்டி குடித்து வந்தால், உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

இவ்வாறு தினமும் குடித்து வந்தால், நமது முகம் பொலிவு பெறுவதுடன், கரும்புள்ளிகள் நீங்கி முகம் அழகாக காணப்படும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.