கடின உழைப்பால் உருவாக்கப்பட்ட கனவு படம் – கவலையில் கார்த்திக் சுப்புராஜ் ட்வீட்..!

ஜகமே தந்திரம் திரைப்படம் கடின உழைப்பையும் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கனவு படம் என்று படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை y not studios தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் கலையரசன் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது “நெட்பிளிக்ஸ்” ஓடிடி தளத்தில் ரிலீஸாக உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஜகமே தந்திரம் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. சுருளி என்பது யார் என்ற கேள்வியுடன் தொடங்கி அசத்தலான சண்டை காட்சிகளுடன் வெளியாகிய ஜகமே தந்திரம் டீசரை தொடர்ந்து படமானது நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில் “ஜகமே தந்திரம் திரைப்படம் கடின உழைப்பையும் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கனவு படம் அதன் பார்வையாளர்களிடம் பேச ஒரு புதிய வழியைக் கண்டறிந்துள்ளது. நெட்பிளிக்ஸ் மூலம் 190 நாடுகளில் வெளியாகிறது. படத்திற்கு உங்கள் எல்லா அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன். என்று கவலையுடன் ட்வீட் செய்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.