திராவிட மாடல் என்பது வாரிசு அரசியல் என நிரூபிக்கப்பட்டு விட்டது – வானதி சீனிவாசன்

திராவிட மாடல் என்பது வாரிசு அரசியலை மையமாகக் கொண்டுள்ளது என்பதை நிரூபிக்கப்பட்டுள்ளது என வானதி சீனிவாசன் பேட்டி.

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், மன்னார்குடி தொகுதி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புதிய அமைச்சராக பதவியேற்றார். டி.ஆர்.பி.ராஜாவுக்கு ஆளுநர் ஆர்என் ரவி பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு மகன் டி.ஆர்.பி.ராஜா மன்னார்குடி தொகுதியில் இருந்து மூன்றாவது முறையாக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இன்று அமைச்சராக பதவியேற்றுள்ளார். இதுகுறித்து, வானதி சீனிவாசன் அவர்கள் விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், பாஜகவில் எந்த ஒரு கடைநிலை தொண்டனும் கூட நாட்டின் உயர்ந்த பதவிக்கு வர இயலும். உண்மையான ஜனநாயகத்தை நாங்கள் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், திராவிட மாடல் என்பது வாரிசு அரசியலை மையமாகக் கொண்டுள்ளது என்பதை நிரூபிக்கப்பட்டுள்ளது. அதன்படி டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி ராஜா இன்று அமைச்சராக பதவி ஏற்று கொண்டுள்ளார் என விமர்சித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.