ஸ்டாலின் தலைமையில் கூடியது திமுக எம்.பி.க்கள் கூட்டம்

திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகின்ற 29-ஆம் தேதி தொடங்குகிறது.மேலும், ஜனவரி 29 முதல் பிப்ரவரி 30 வரை முதல் அமர்வும், மார்ச் 8 முதல் ஏப்ரல் 8 வரை இரண்டாவது அமர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம்  சென்னை – அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியுள்ளது.இந்த கூட்டத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.