மாநில திட்டக்குழு உறுப்பினராக டாக்டர் எழிலன் நியமனம்!

மாநில திட்டக்குழு உறுப்பினராக ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் நா.எழிலன் நியமனம்.

மாநில திட்டக்குழு உறுப்பினராக ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் நா.எழிலன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே மாநில திட்டக்குழு உறுப்பினராக இருந்த டிஆர் ராஜா அமைச்சராக பதவியேற்றத்தை அடுத்து டாக்டர் நா.எழிலன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில திட்டக்குழு என்பது தமிழ்நாடு முதல்வர் தலைமையில் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு வருகிறது.

மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சி காண செயல்பாடுகள் குறித்து தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்து வருகிறது மாநில திட்டக்குழு. மாநில திட்டக்குழு துணைத் தலைவர் கீழ் வளர்ச்சி சார்ந்த முக்கிய துறைகளின் நிபுணர்கள் உறுப்பினர்களாக கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 1971-ஆம் ஆண்டு தமிழகத்தில் மாநில திட்டக்குழுவை ஏற்படுத்தினார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்