இனி கவலை வேண்டாம்.! மொபைல் நெட்ஒர்க்கை 3 நாட்களில் மாற்றிக் கொள்ளலாம்.!

  • எம்.என்.பி சேவை முந்தைய கணக்குப்படி ஒரு நெட்வொர்கில் இருந்து மற்றொரு நெட்வொர்க்கிற்கு மாற்ற 15 நாட்கள் கால அவகாசம் இருந்தது.
  • தற்போது எம்.என்.பி சேவை அறிவிப்பின் படி மற்றொரு நெட்வொர்க்கிற்கு இனி 3 நாட்களில் மாற்றிக் கொள்ளலாம்.

தற்போது பல்வேறு சிறப்பம்சங்களுடன் எம்.என்.பி சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. எம்.என்.பி சேவை முந்தைய கணக்குப்படி ஒரு நெட்வொர்கில் இருந்து மற்றொரு நெட்வொர்க்கிற்கு மாற்ற 15 நாட்கள் கால அவகாசம் ஆகும். இந்நிலையில் தற்போது டிராய் வெளியிட்ட அறிக்கையில், நெட்ஒர்க் சேவையை மாற்றும் விதிகள் எளிதாக்கி இன்று முதல் அமலுக்கு வந்தது. அதாவது மொபைல் சேவை வழங்கும் தொலைத் தொடர்பு நிறுவனத்தை இனி 3 நாட்களில் மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மாற்றுவதற்கான வழிமுறை PORT என டைப் செய்து இடைவெளி விட்டு தங்களின் 10 இலக்கு மொபைல் எண்ணை டைப் செய்து 1900 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்து போர்டபிலிட்டியை  மாற்றிக் கொள்ளலாம். இதற்கான கட்டணம் ரூ.6.96 மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நம்பருக்கு மெசேஜ் அனுப்பியதும் தங்களுக்கு வரும் மெசேஜை 30 நாட்களுக்குள் எப்போ வேண்டுமானாலும் பயன்படுத்தி நெட்வொர்க்கை மாற்றிக் கொள்ளலாம்.

இதையடுத்து UPC குறியீட்டு எண் மெசேஜ் மூலம் வழங்கப்படும். பின்னர் அருகில் உள்ள சேவைக்கு சென்று அதனை காண்பித்து அவர்கள் தரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தரவேண்டும். கட்டணம் மற்றும் ஆதாரம் போன்றவற்றை அளித்தால் புதிய சிம் கார்டை நீங்கள் விரும்பும் சேவைக்கு அந்நிறுவனம் உங்களுக்கு வழங்கும். பின்பு அந்த எண்ணானது மூன்று நாட்களில் செயல்படுத்தபடும்.

பின்னர் இடைப்பட்ட காலத்தில் நெட்வொர்க் மாற்றம் விரும்பவில்லை என்றால் CANCEL என டைப் செய்து 1900 என்ற எண்ணிற்கு மெசேஜ் அனுப்பினால் விரைவில் நெட்வொர்க் மாற்றம் சேவை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்