நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட எனக்கு சம்பளம் வேண்டாம்.! தமிழக காவல்துறை அதிகாரி விருப்பம்..!

  • 2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். 
  • தற்போது நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை தூக்கிலிட நான் சம்பளம் வாங்காமல் பணியை செய்ய தயார் என்று தமிழக தலைமை காவலர் சுபாஷ் சீனிவாசன் கடிதத்தின் மூலம் விருப்பம் தெரிவித்தார்.

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் நிர்பயா என்னும் மருத்துவ மாணவி பேருந்தில் பயணிக்கும் போது கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிப்போட்டது. அதை தொடர்ந்து நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை தூக்கிலிட நான் தயார் என்றும் சம்பளம் இல்லாமல் பணியை செய்ய தமிழக தலைமை காவலர் சுபாஷ் சீனிவாசன் கடிதம் அனுப்பியுள்ளார்.

இச்சம்பவத்தில் ராம்சிங், மகேஷ்சிங், வினய் சர்மா, பவன்குப்தா, அக்தர் தாக்கூர் மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் 16 வயது சிறுவனுக்கு திகார் சட்டப்படி அதிகபட்சமாக 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்றும் இன்னொரு குற்றவாளியான ராம்சிங் சிறையில் இருக்கும் போதே தற்கொலை செய்து கொண்டார்.

மீதம் இருக்கும் 4 பேருக்கும் விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. இதை டெல்லி உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தனர். இவர்களது கருணை மனுக்களை டெல்லி துணை நிலை ஆளுநர் நிராகரிக்கப்பட்டார்.

இந்நிலையில், நிர்பயா வழக்கு குற்றவாளிகள் இருக்கும் திகார் சிறையில் தூக்கிலிடுபவர் பணிக்கு தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்ட காவல் பணியிடை பயிற்சி மைய தலைமைக் காவலர் சுபாஷ் சீனிவாசன் விண்ணப்பித்துள்ளார். குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அந்தப் பணியை செய்ய விரும்புவதாகவும் இதற்காக சம்பளம் எதுவும் தரவேண்டாம் என்றும் திகார் சிறை அதிகாரிகளுக்கு அனுப்பிய கடிதத்தில் சுபாஷ் சீனிவாசன் தெரிவித்திருந்தார்.

மேலும் இவர் சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு முன் சாலை ஓரத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களில் அடிக்கப்பட்ட ஆணியை அகற்றி பிரபலம் அடைந்தார்.

 

 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்