“எனது கார் ஏறி கமலாலயம் செல்ல வேண்டாம்” – பேரவையில் எம்.எல்.ஏ உதயநிதியால் கலகல!

“எனது கார் ஏறி கமலாலயம் செல்ல வேண்டாம்” – பேரவையில் எம்.எல்.ஏ உதயநிதியால் கலகல!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சட்டப் பேரவையில் இருந்து வெளியே வந்தபோது எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் அவர்கள் தவறுதலாக எம்எல்ஏ உதயநிதி அவர்களின் காரில் ஏற முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில்,எதிர்க்கட்சி தலைவர் எப்போது வேண்டுமானாலும் தனது காரை எடுத்து செல்லலாம் எனவும்,ஆனால்,தனது காரை எடுத்துக் கொண்டு கமலாலயம் மட்டும் சென்று விடவேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் ஈபிஎஸ் மற்றும் துணைத்தலைவர் ஓபிஎஸ் ஆகியோரை குறிப்பிட்டு சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.இதனால்,சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

குறிப்பாக,கடந்த ஆண்டு தான் பேசும்போது எதிர்க்கட்சி தலைவர் வெளிநடப்பு செய்தார் என்றும்,ஆனால்,தற்போது வெளிநடப்பு செய்யாமல் இருப்பதால் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு உதயநிதி நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும்,பேசிய உதயநிதி அவர்கள்,வெளிநடப்பு செய்தால் தனது காரில்தான் ஏற முயல்கிறார் எனவும், எதிர்க்கட்சி தலைவர் எப்போது வேண்டுமானாலும் தனது காரை எடுத்து செல்லலாம் என்றும்,ஆனால் கமலாயம்(பாஜக அலுவலகம்) மட்டும் செல்ல வேண்டாம் என்று கூறிய எம்எல்ஏ உதயநிதி,தானும் 3 நாட்கள் தவறுதலாக ஈபிஎஸ் அவர்களின் காரில் ஏற முயன்றதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே,இதற்கு பதில் அளித்த ஓபிஎஸ் அவர்கள்,அதிமுகவினரின் கார் எப்போதும் எம்ஜிஆர் அலுவலகம் மேட்டுமே செல்லும் என்று தெரிவித்துள்ளார்.

 

Join our channel google news Youtube