காலையில் எழுந்தவுடன் மறந்து கூட இந்த உணவுகளை சாப்பிட்டு விடாதீர்கள்!

காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத உணவுகள்.

நம்மில் அதிகாமானோர் காலையில் எழுந்தவுடன், ஏதாகிலும் சாப்பிடுவது வழக்கம். ஆனால், காலையில் வெறும் வயிற்றில் நாம் சாப்பிடுகிற அனைத்து உணவுகளுமே நமது உடலுக்கு ஏற்றதாக இருப்பதில்லை.

காபி & டீ

நம்மில் அதிகாமானோர் காலையில் காபி அல்லாது டீயை குடித்தால் தான் உடலில் ஒரு உற்சாகமே வரும் என்று கூறுவதுண்டு. ஆனால், இவ்வாறு வெறும் வயிற்றில் இதனை குடிப்பது நல்லதல்ல.

காபி மற்றும் டீயில் காணப்படும் காஃபின், நமது உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். எனவே, எப்பொழுதுமே காலையில் எழுந்தவுடன்,காபி அல்லது டீ குடிப்பதற்கு முன், ஒரு டம்ளர் தண்ணீர் அருந்திய பின் குடிப்பது நல்லது.

தயிர்

தயிர் குடிப்பதால் நமது உடலில் பல ஆரோக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டாலும், தயிரில் நல்ல பாக்டீரியாக்கள் இருந்தாலும், காலையில் வெறும் வயிற்றில் தயிரை குடிப்பது நல்லதல்ல. அவ்வாறு குடிக்கும் பட்சத்தில், அந்த பாக்டீரியாக்கள் வயிற்றில் உள்ள படலத்துடன் வினை புரிந்து வயிறு சம்பந்தமான பல பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும்.

வாழைப்பழம்

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே, வாழைப்பழத்தை விரும்பி சாப்பிடுவதுண்டு. ஆனால், இந்த வாழைப்பழத்தை நாம் காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், மாக்னீசியம் உடலில் அதிகரித்து, கால்சியம் மற்றும் மாக்னீசியத்தில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தக் கூடும்.

மாத்திரைகள்

மாத்திரைகள் நாம் எப்போது எடுத்துக் கொண்டாலும், அவற்றை வரும் வயிற்றில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. அவ்வாறு நாம் காலையில் வெறும் வயிற்றில் மாத்திரைகளை சாப்பிடும் போது, அவை வயிற்றில் உள்ள படலத்தை அரிப்பதோடு, வயிற்று அமிலத்துடன் கலந்து உடலில் ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தக் கூடும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.