இரவில் தூங்கும் முன் இதையெல்லாம் செய்யாதீங்க!

  • இரவு தூக்கம் என்பது சாதாரண மனிதனின் அடிப்படை தேவையாகும். அதிலும் சிலர் சில தவறுகளை தெரிந்தும் தெரியாமலும் செய்வார்கள்.
  • அது என்னவென்றும் அது எப்படி தவிர்க்கலாம் என்றும் கிளே பாருங்கள்.

இரவு தூக்கம் என்பது மிக முக்கியமான விஷயம் நம்முடைய உடலுக்கு. இரவு தூக்கம் நமது உடலை புத்துணர்ச்சி செய்து மறுநாள் காலையில் மிகவும் தெம்போடு இருக்க உதவுகிறது. நம்முடைய இரவு தூக்கம் என்பது எந்தவிதமான இடையூறும் இல்லாமல் இருக்க வேண்டும். அதற்கு நாம் செய்யும் சில செயல்கள் தடையாக இருக்கும். அதே நாம் தவிர்க்க வேண்டும். நாம் இரவில் நிம்மதியாக உறங்கவும் நம்முடைய உடல் ஆரோக்கிய கேடாமல் இருக்க அந்த நடைமுறைகளை நீங்கள் இரவில் தூங்க செல்லும் முன் கடைபிடிக்க வேண்டும்.

இரவு தூங்கும் போது குளிக்கும் பழக்கம் உள்ளவர்கள் உலர்ந்த ஆடைகளை அணிந்து தூங்குவது நல்லது சிலர் சோம்பேறி தன்மையால் அணிந்துகொண்ட ஆடையை உடம்பில் உள்ள தண்ணீரை துடைத்துக்கொண்டு அப்படி அணிந்து கொண்டு படுத்து தூங்கி விடுவார்கள் இதனால் சரும பிரச்சனைகள் வரலாம்.

சிலர் இரவு தூங்கச் செல்லும் சிகரெட் பிடித்த பின்பே படுக்கைக்குச் செல்வார்கள் மற்ற நேரங்களில் நீங்கள் சிகரெட் பிடிப்பதை விட தூங்கும் முன்னர் சிகரெட் பிடிப்பது மிகப்பெரிய ஆபத்து ஆகும். மேலும் தூங்கும் போது ஆல்கஹால் அல்லது காபி அருந்தவும் கூடாது.

சிலர் உறங்கும் முன் உடற்பயிற்சிகள் செய்வார்கள் அப்படி நீங்கள் செய்வாராக இருந்தால் படுக்கையில் உடற்பயிற்சிகள் செய்யக் கூடாது.மேலும் பெண்கள் தங்கள் தலையை முடியை இருக்கிப் பிடித்து ஜடை அல்லது கொண்டையும் போடக்கூடாது,இதனால் கழுத்து வலி பிடரி வலி தோல்பட்டை வலி தலைவலி போன்ற எல்லா வலிகளும் வரக்கூடும்.

குழந்தைகளும் முதியவர்களும் தூங்கும் முன்பு வயிறு முட்ட சாப்பிடக்கூடாது. இப்போது பட குடும்பங்களில் இரவுகளில் துரித உணவுகள் சாப்பிடுவது வழக்கமாக வைத்துள்ளார்கள். இரவில் இதையெல்லாம் உண்ணக் கூடாது அதற்கு பதிலாக வெதுவெதுப்பான பால் அல்லது சுக்கு நீர் அருந்துவது உடலுக்கு நல்லது.

இரவில் படுப்பதற்கு முன்பாக ஆப்பிள்,ஆரஞ்சு,பலாப்பழம்,மாம்பழம் போன்றவற்றை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. இரவில் உண்ணத் தகுந்த பழங்கள் வாழைப்பழங்கள் கொய்யாப்பழம் மட்டுமே அவற்றை கூட அளவாக தான் உண்ண வேண்டும்.

இரவில் குளித்திவிட்டு தூங்க செல்லும் முன்பு முகம் மற்றும் சருமத்திற்கு பவுடர் போட்டுக் கொள்ளக் கூடாது. ஏனென்றால் அது பவுடர்கள் சருமத்துளைகளை அடைக்க கூடும் மேலும் இதனால் ஒவ்வாமை ஏற்படலாம்.இதனால் இதையெல்லாம் தவிர்ப்பது உடலுக்கு மிகவும் நல்லது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.