29 C
Chennai
Wednesday, June 7, 2023

கடந்த 4 ஆண்டுகளாக ரோஹித் ஷர்மா சிறப்பாக ஆடியுள்ளார்…விராட் கோலி புகழாரம்.!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று லண்டன் ஓவல்...

தகர்க்கப்பட்ட உக்ரைன் அணை..பெருக்கெடுத்த வெள்ளம்..! அவசரநிலை அறிவிப்பு..!

தெற்கு உக்ரைனில் சோவியத் காலத்து அணை தகர்க்கப்பட்டதால் அணையைச்...

பொய்யான வேலைவாய்ப்பு செய்திகளை நம்ப வேண்டாம் – சென்னை மெட்ரோ முக்கிய அறிக்கை.!

சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்புகள் பற்றி  வாட்ஸ் ஆப் மூலம் பரவும் பொய்யான அறிவிப்புகளை நம்ப வேண்டாம் என பொதுமக்களுக்கு மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் இருப்பின் அதற்கான அறிவிப்புகள் அதிகாரப் பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அவைதான் உண்மையான அறிவிப்புகள் என்றும், பிற இணையதளம் மற்றும் வாட்ஸ்அப் போன்றவற்றில் அவ்வப்போது வெளிவரும் வேலை வாய்ப்பு அறிவிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் மெட்ரோ இரயில் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பி குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே, இணையதளத்தில் வெளியாகும் பொய்யான செய்திகள் மற்றும் விளம்பரங்களை நம்பி, அதிகார பூர்வமற்ற தனியாரிடம் வேலை தேடி இழப்புகள் ஏற்பட்டால் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது என்று தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.