நீண்ட கால ஆலோசகரின் தண்டனையை குறைத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்

நீண்ட கால ஆலோசகரின் தண்டனையை குறைத்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

By venu | Published: Jul 11, 2020 06:42 PM

நீண்ட கால ஆலோசகரின் தண்டனையை குறைத்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு 'இருப்பதாக நீண்டகாலமாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில்,அமெரிக்க அதிபராக உள்ள டிரம்பின் நீண்ட கால ஆலோசகர் ரோஜர் ஸ்டோன் என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது அமெரிக்க நீதிமன்றம். இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ,தனது ஆலோசகரான ரோஜரின் தண்டனையை மாற்றியுள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,ரோஜர் இந்த வழக்கில் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டுள்ளார். இப்போது அவர் ஒரு சுதந்திரமான மனிதர்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் டிரம்பின் இந்த முடிவிற்கு ஜனநாயக கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Step2: Place in ads Display sections

unicc