தலையில் தேனை தடவினால் வெள்ளை முடி வளருமா? இது உண்மைதானா?

தலையில் தேனை தடவினால் வெள்ளை முடி வளருமா? நமது சிறு

By leena | Published: Jul 11, 2020 09:45 AM

தலையில் தேனை தடவினால் வெள்ளை முடி வளருமா?

நமது சிறு வயதில் இருந்தே, நாம் கேள்விப்பட்ட ஒரு விடயம் தான், 'தலையில் தேனை தடவினால் வெள்ளை முடி வளரும்.' இதனால், நாம் நமது அழகை மெருகூட்ட, பல இயற்கையான அழகு சாதன பொருட்களை பயன்படுத்தும் போது, தேனை பயன்படுத்துவதுண்டு. அவ்வாறு பயன்படுத்தும் போது, தேனை நாம் மிகவும் கவனமாக கையாள்வது உண்டு.

தேன் என்பது, ஒரு இயற்கையான கண்டிஷனர் போன்றது. இதில் இருக்கும் ஆண்டி ஆக்சிடண்ட்கள் நமது முடி சார்ந்த பிரச்சனைகளை போக்குவதில், பெரும் பங்கு வகிக்கிறது.

தேன் என்பது நமது முடிக்கு தேவையான ஈரப்பதத்தை அளிப்பதோடு, முடி வறண்டு போகாமல் பாதுகாக்கிறது. இதில் இருக்கும் ஆண்டி பாக்டீரியல், முடியில் ஏற்படக் கூடிய தொற்றுக்கள் மற்றும் அழற்சி சம்பந்தமான பிரச்சனைகளை நீக்கக் கூடியது.

தேனில் உள்ள சத்துக்கள் சொரியாசிஸ் போன்ற நோய்களை எதிர்த்து போராடுவதோடு, தொற்று ஏற்படக் கூடிய பாக்டீரியாக்களை அளித்து, முடியை வலுவானதாக மாற்ற உதவுகிறது.

பொதுவாக நாம் முடிக்கு பயன்படுத்தக் கூடிய பிளீச்சிங் போன்ற பொருட்களில், தேன் முக்கியமான ஒன்றாக சேர்க்கப்படுகிறது.

Step2: Place in ads Display sections

unicc