உங்கள் முடியின் நுனி வெடித்து காணப்படுகிறதா? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

இளம்பெண்களுக்கு அழகே கூந்தல் தான். இந்த கூந்தலை பராமரிப்பதற்காக பல முயற்சிகளில் ஈடுபட்டு, அதிகமான  செலவீடுவார்கள். ஆனால், இப்பிரச்னைகளுக்கு செயற்கையான முறையை பின்பற்றுவதை தவிர்த்து, இயற்கையான முறையை பின்பற்றி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

தற்போது இந்த பதிவில், கூந்தல் நுனி வெடிப்பதற்கு இயற்கையான முறையில் எப்படி தீர்வு காண்பது என்பது பற்றி பார்ப்போம்.

தேவையானவை

  • அவகோடா -1
  • வாழைப்பழம் – 1
  • ரோஸ் வாட்டர் – 5 ஸ்பூன்

செய்முறை

அவகோடா மற்றும் வாழைப்பழம் இரண்டையும் நன்கு மசித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனுடன் 5 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும்.

பின் இந்த கலவையை தலையில் தடவி ஒரு மணி நேரம் நன்றாக ஊற விட வேண்டும். அதன் பின் ஒரு மணிநேரத்திற்கு பிறகு, ஷாம்பூவால் தலையை அலச வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், முடி வெடிப்புகள் காணாமல் போய்விடும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.