கருவில் இருந்த குழந்தைக்கு முதுகெலும்பு அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்த மருத்துவர்கள் !

கருவில் இருந்த குழந்தைக்கு முதுகெலும்பு அறுவை சிகிச்சை செய்து லண்டன் மருத்துவர்கள் சாதனை நிகழ்த்தியுள்ளார்கள்.

லண்டனை சேர்ந்த ஷெர்ரி ஷராப் எனும் பெண் கருவுற்ற  20 வாரங்களுக்கு பின்பு பரிசோதனைக்கு கிங்ஸ் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.அவரை பரிசோதித்த டாக்டர்கள்அவரை ஸ்கேன் செய்து பார்த்ததில் குழந்தையின் முதுகு தண்டுவடம் வளர்ச்சியடைய வில்லை என்று கூறியுள்ளார்கள்.இதனால் குழந்தை கால்களில் உணர்வு இழப்பு, குடல் சம்பந்தப்பட்ட நோய்கள், முடக்கு வாதம் என பல நோய்களால் பாதிக்கபடும் என்று தெரிவித்து இருக்கிறார்கள்.

ஷெர்ரி ஷராப்பின் குழந்தைக்கு 27 வாரங்களை கடந்து கருவில் இருந்த இவருடைய குழந்தை ஜாக்ஸனுக்கு  முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை செய்து லண்டன் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளார்கள்.அறுவை சிகிச்சை  செய்து 6 வாரங்களுக்கு பின்பு இவர் ஜாக்ஸனை பெற்றேடுத்தார். தற்போது குழந்தையும் நலமாக இருப்பதாக ஷெர்ரி ஷராப் தெரிவித்துள்ளார்.

Leave a Comment