நாளை கருப்பு பட்டை அணிந்து மருத்துவர்கள் போராட்டம்.!

செவிலியர் பிரிசில்லா குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும்.

தமிழகத்தில் நாளை கருப்பு பட்டை அணிந்து அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டம் நடத்துவதாக தமிழக மருத்துவ கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. செவிலியர் பிரிசில்லா குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்று போராட்டம் நடத்துவதாக தெரிவித்துள்ளனர். 

மேலும், கொரோனா பாதிப்புள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் சிகிச்சை பெற தனி இடம் ஒதுக்கவேண்டும் வேண்டும் மருத்துவ கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அனைவருக்கும் சிறப்பு ஊதியமாக ஒரு மாத சம்பளம் வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

இதனிடையே, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா உடல்நலக்குறைவால் கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார். பின்னர் அவரது குடும்பத்திற்கு முதல்வர் பழனிசாமி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக தெரிவித்திருந்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்