மருத்துவர்களின் கருப்பு பேட்ஜ் போராட்டம் வாபஸ்.!

நாளை மருத்துவர்கள் மேற்கொள்ள இருந்த கருப்பு பேட்ஜ் போராட்டமானது வாபஸ் பெறப்பட்டுள்ள்ளது. தமிழகத்தில்

By manikandan | Published: Jun 04, 2020 10:16 PM

நாளை மருத்துவர்கள் மேற்கொள்ள இருந்த கருப்பு பேட்ஜ் போராட்டமானது வாபஸ் பெறப்பட்டுள்ள்ளது.

தமிழகத்தில் நாளை கருப்பு பட்டை அணிந்து அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டம் நடத்துவதாக தமிழக மருத்துவ கூட்டமைப்பு தெரிவித்திருந்தது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த செவிலியர் பிரிசில்லா உடல்நலக்குறைவால் உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என மருத்துவ கூட்டமைப்பு கோரிக்கை விடுத்து இந்த போராட்டம் நடத்தபோவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

மேலும், கொரோனா பாதிப்புள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் சிகிச்சை பெற தனி இடம் ஒதுக்கவேண்டும் வேண்டும் எனவும், மருத்துவ கூட்டமைப்பு கோரிக்கை வைத்திருந்தது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அனைவருக்கும் சிறப்பு ஊதியமாக ஒரு மாத சம்பளம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இதனிடையே, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா உடல்நலக்குறைவால் கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார். பின்னர் அவரது குடும்பத்திற்கு முதல்வர் பழனிசாமி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக தெரிவித்திருந்தார்.

தற்போது, நாளை தமிழக மருத்துவ கூட்டமைப்பு சார்பாக மருத்துவ ஊழியர்கள் மேற்கொள்ள இருந்த கருப்பு பேட்ஜ் போராட்டமானது வாபஸ் பெறப்பட்டுள்ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Step2: Place in ads Display sections

unicc