மருத்துவர் சாந்தா அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரின் இறுதி சடங்குகளின் போது ”காவல்துறை மரியாதை” அளிக்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,மருத்துவர் சாந்தா அவர்களை இழந்து வாடும் சென்னை அடையாறு புற்று நோய் சிகிச்சை மையத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த மருத்துவர் சாந்தா, அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், அன்னாரின் தன்னலமற்ற சேவையினை கௌரவிக்கும் விதமாகவும் அன்னாரின் இறுதி சடங்குகளின் போது காவல் துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய நான் உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.