மருத்துவர், பத்திரிகையாளர் தற்கொலை.! எய்ம்ஸ் மருத்துவ கண்காணிப்பாளர் மாற்றம்.!

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட  37

By murugan | Published: Jul 11, 2020 01:30 PM

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட  37 வயதான பத்திரிகையாளர் ஒருவர் சிகிச்சைப் பெற்று வந்தநிலையில், கடந்த திங்கள் கிழமை பிற்பகல் 2 மணி அளவில்  மருத்துவமனையின் நான்காவது மாடியில் இருந்து விழுந்து  அந்த பத்திரிகையாளர் தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் ஜெய் பிரகாஷ் நாராயண் அபெக்ஸ்  உடனடியாக மாற்ற மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன்   உத்தரவிட்டார். பத்திரிகையாளர் தற்கொலை குறித்து ஆராய அமைக்கப்பட்ட 4 பேர் கொண்ட விசாரணைக் குழு இன்று தனது அறிக்கையை சமர்பிக்கவுள்ளனர்.

நேற்று டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வந்த அனுராக்குமார் (25) என்ற இளம் மருத்துவர் எய்ம்ஸ் மருத்துவமனையின் 10 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். விசாரணையில் அவர் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. டாக்டர் ஆபத்தான இருந்தநிலையில் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Step2: Place in ads Display sections

unicc