உலகின் தலைசிறந்த பெண்மணிகளுக்கான விருதை பெற்றார் டாக்.தமிழிசை…!

பெண்கள் உரிமை, பாலின சமத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் ஆற்றிய சிறப்பான சேவைக்காக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு இன நடவடிக்கைக் குழு என்ற அமைப்பு, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறப்பான சாதனை படைத்துடன், மக்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்த வித்திட்ட 20 பெண்களுக்கு விருதுகளை அறிவித்திருந்தது. இந்த விழா அமெரிக்காவின் இல்லினாய்ஸில் நடைபெற்றது.

இந்த இருபது பெண்களின் பட்டியலில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் இடம்பெற்றிருந்தார். பெண்கள் உரிமை, பாலின சமத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் ஆற்றிய சிறப்பான சேவைக்காக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு இவ்விருது வழங்கப்பட்டதாக நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து,  புதுவையில் இருந்தவாறு காணொளி வாயிலாக பேசிய தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், பெண்கள் முன்னேற்றத்திற்கான தனது பொறுப்பை இரட்டிப்பாக்கி உள்ளதாகவும், குடும்பத்திற்காகவும், சமூகத்திற்காகவும், நாட்டிற்காகவும் உழைக்கும் கோடிக்கணக்கான பெண்களுக்கு இந்த விருதை சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.