உங்கள் சருமம் இளமையாக மாற வேண்டுமா? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

நாம் இயற்கையான முறையில் மேற்கொள்ளும் எந்த முயற்சியும், உடனடி தீர்வு தரவில்லை என்றாலும், மெது மெதுவாக நிரந்தரமான தீர்வை தரும். பீட்ரூட்டை பயன்படுத்தி முகத்தை இளமையாக்குவது எப்படி?

நாம் நமது சரும அழகை மேம்படுத்த பல வகையான கெமிக்கல்  கிரீம்களை பயன்படுத்துவது உண்டு. இதனால், நமது சருமத்தில் பாலா பக்கவிளைவுகள் ஏற்படுத்தக் கூடும். ஆனால், நாம் இயற்கையான முறையில் மேற்கொள்ளும் எந்த முயற்சியும், உடனடி தீர்வு தரவில்லை என்றாலும், மெது மெதுவாக நிரந்தரமான தீர்வை தரும். தற்போது இந்த பதிவில், பீட்ரூட்டை பயன்படுத்தி முகத்தை இளமையாக்குவது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • பீட்ரூட்  – சிறு துண்டு
  • அரிசி – 1 ஸ்பூன் (ஊறவைத்தது)
  • கற்றாழை ஜெல் – 2 ஸ்பூன்
  • எலுமிச்சை – அரை துண்டு

செய்முறை

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பீட்ரூட், காற்றாழை ஜெல், அரிசி, எலுமிச்சை ஆகியவற்றை மொத்தமாக கலந்து மிக்சியில் நன்கு பேஸ்ட் போல அரைக்க வேண்டும்.

பின் இதனை வாரம் இருமுறை முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், முகம் இளமையாகவும், மென்மையாகவும் இருக்கும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.