உங்கள் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த குழந்தைகளாக இருக்க வேண்டுமா? அப்ப இதை மட்டும் பண்ணுங்க!

நம்முடைய குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தியுள்ள குழந்தைகளாக வளர வேண்டுமென்றால், கீழ்க்காணும் உணவுகளை அவர்களுக்கு தாய்மார்கள் கொடுக்க வேண்டும்.

பொதுவாக மனிதருடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக காணப்படும் பட்சத்தில் பலவகையான நோய்கள் ஏற்படக் கூடும். குழந்தைகளைப் பொறுத்தவரையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக காணப்படும் பட்சத்தில் மிகவும் எளிதாக அவர்களை எந்த நோய் வேண்டுமானாலும் தொற்றிக்கொள்ளும். எனவே நம்முடைய குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தியுள்ள குழந்தைகளாக வளர வேண்டுமென்றால், கீழ்க்காணும் உணவுகளை அவர்களுக்கு தாய்மார்கள் கொடுக்க வேண்டும்.

தாய்ப்பால்

குழந்தைகளுக்கு மிகவும் தேவையான ஒன்று தாய்ப்பால் தான். பிறந்த குழந்தைகள் உடனே அருந்த கூடிய இந்த தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக காணப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய ஒவ்வாமை, புற்றுநோய் தாக்கம், கிருமி தாக்குதல் இதயம் மற்றும் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்களை தடுக்கலாம். மேலும் மூளையின் செயல்திறன் அதிகரித்து காணப்படும்.

வைட்டமின் டி3

குழந்தைகள் பிறந்த உடனேயே மருத்துவர்கள் கூறும் அறிவுரைகளில் ஒன்று, பிறந்த குழந்தைகளில் காலை வெயிலில் சிறிது நேரமாவது காண்பிக்க வேண்டும் என்பது தான். இவ்வாறு நாம் சூரிய வெளிச்சத்தில் குழந்தைகளை சிறிது நேரம் காண்பிக்கும்போது, வைத்தான் டி3 சத்துகள் கிடைக்கிறது. இதன்மூலம் பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ் ஆகியவற்றிலிருந்து குழந்தைகளை காக்கிறது. மேலும் இது பல் வளர்ச்சிக்கும், எலும்புகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் உதவுகிறது.

காய்கறிகள்

காய்கறிகளைப் பொறுத்த வரையில் அனைத்து வகையான காய்கறிகளிலும் ஒவ்வொரு வகையான சத்துக்கள் நிறைந்துள்ளது. கேரட், உருளை, பீட்ரூட், பீன்ஸ்  போன்ற அனைத்து காய்கறிகளையும் தினமும் ஒரு வேளை உணவாக கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மீன்

மீனை பொறுத்தவரையில் இது அதிகப்படியான நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய உணவு வகைகளில் ஒன்று. இதில் ஃபேட்டி ஆசிட் சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குவதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. பாலூட்டும் தாய்மார்கள் மீன்களை சாப்பிட்டால் பால் அதிகமாக சுரப்பதோடு, குழந்தைகளுக்கும் இதன் மூலம் பல்வேறு சத்துக்கள் கிடைக்கிறது.

கீரைகள்

நாம் உண்ணக்கூடிய பலவகையான சத்துக்கள் நிறைந்த கீரைகள் உள்ளது. கீரைகளில் வைட்டமின் சி, பீட்டா கரோட்டின், ஆன்டி ஆக்சிடன்ட் ஆகிய சத்துக்கள் உள்ளது. இந்த சத்துக்கள் நமது உடலில் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.  குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ்வதோடு, உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.