சந்தோசமாக வாழ வேண்டும் என விரும்புகிறீர்களா….? அப்ப கண்டிப்பா இதை படிங்க…!

நாம் சந்தோசமாக இருக்க என்ன செய்ய வேண்டும்…?

நம்மில் அனைவரும் சந்தோசமாக வாழ வேண்டும் என்று தான் விரும்புவதுண்டு. ஆனால், எல்லாருக்கும் சந்தோசம் என்பது அவர்களது நிலைத்து நிற்பதில்லை. இதற்கு காரணம் நாம் தான். தற்போது இந்த பதிவில் நாம் சந்தோசமாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி  பார்ப்போம்.

  • முதலில் நாம் ஒன்றை நன்றாக  தெரிந்து கொள்ள வேண்டும். நமது எது சந்தோசத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ, எது நிம்மதியை கொடுக்காதோ அவற்றை விட்டு  விலக வேண்டும்.
  • உங்களது மனதை ஒரு நிலைப்படுத்த குறைந்தது 10 முதல் 30 நிமிடம் வரை நடைப்பயிற்சி மேற்க்கொள்ளுங்கள்.
  • எப்போதும் நேர்மறையான எண்ணங்களை தான் யோசிக்க வேண்டும். எதிர்மறையான எண்ணங்களை விட்டு விலக வேண்டும்.
  • உங்களால் முடிந்த அளவு மட்டும் வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
  • உங்களது உடல் ஆரோக்கியம்  மற்றும் மன ஆரோக்கியத்தை பேணி காக்க குறைந்தது 7 மணி நேரமாவது தூங்குங்கள்.
  • உங்களை எப்போதும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்காதீர்கள். உங்களுக்கு தனி பாதையை அமைத்து, அந்த பாதையில் வெற்றி சிறக்க  முயலுங்கள்.
  •  வாழ்க்கை என்பது ஒரு பள்ளிக்கூடம் போன்றது . இங்கு வரும் கஷ்டங்களும், பிரச்சனைகளும் ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
  • உங்களது எதிர்காலத்தை குறித்து நிறைய கனவு காணுங்கள். அது உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
  •  கடந்த காலத்தை மறக்க முயற்சியுங்கள். அது உங்களது நிகழ்காலத்தை  பாதிக்கும்.
  • ஒவ்வொரு நாளும் விடியும் போது, இறைவனுக்கு நன்றி கூறுங்கள்.
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.