பெண்களை இப்படி தான் அசிங்கமா பேசுவீங்களா.? உச்சக்கட்ட கோவத்தில் இந்தியன்-2 நாயகி.!

பிரியா பவானி சங்கர் அவர்களை எதிர்த்து பேசிய பெண்ணை அசிங்கமாக பேசிய ரசிகர்கள்

By ragi | Published: Jun 02, 2020 07:04 PM

பிரியா பவானி சங்கர் அவர்களை எதிர்த்து பேசிய பெண்ணை அசிங்கமாக பேசிய ரசிகர்கள் மீது அவர் கோவமாக பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் பிரியா பவானி சங்கர். ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக திரைக்கு வந்த இவர் கல்யாணம் முதல் காதல் வரை சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமானார். அதனையடுத்து மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக வெள்ளித்திரையில் காலெடுத்து அறிமுகமானார். தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் கமல்ஹாசனின் இந்தியன் 2, பொம்மை, கசடதபற, களத்தில் சந்திப்போம், ஹரிஷ் கல்யாணுடன் பெள்ளுச்சூப்ளு ரீமேக் மற்றும் விஷாலின் ஒரு படம் என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் ரசிகர்களிடம் லைவில் பேசிய போது சமூக பிரச்சினைகளை குறித்து பதிவிட, அதனை கண்ட பெண்மணி ஒருவர் ஏடாகூடமாக கேள்வி கேட்க, இவரும் பதிலுக்கு திட்டினார். தற்போது அதனை குறித்து அவர் கூறியிருப்பதாவது, பெண் ஒருவர் என் பதிவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து நான் நாகரீகமான முறையில் அவருக்கு பதலளித்தேன். ஆனால் எனது சில ரசிகர்கள் அந்த பெண்ணை அசிங்கமாக திட்டியுள்ளனர். அவரை திட்ட நமக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் என்னை போல அவரிடம் மரியாதை கொடுத்த பேசியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc