பிரபல நடிகரை காதலிக்கிறேனா?ரகுல் ப்ரீத்தி சிங் விளக்கம்.!

நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் பிரபல நடிகரை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் வெளியான தகவல் உண்மையில்லை என்று ரகுல் ப்ரீத்தி சிங் விளக்கமளித்துள்ளார்.

நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் கடைசியாக சூர்யாவுடன் இணைந்து என்.ஜி.கே படத்தில் நடித்திருந்தார்.தற்போது இவர் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திலும் , சிவகார்த்திகேயனின் அயலான் படத்திலும் நடித்து வருகிறார்.சமீபத்தில் இவர் போதைப் பொருள் வழக்கில் சிக்கியது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ரகுல் ப்ரீத்தி சிங் பிரபல இந்தி நடிகர் ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் ,அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது . தற்போது இது குறித்து விளக்கமளித்துள்ள ரகுல் ப்ரீத்தி சிங்,நான் நடிகரை காதலிப்பதாக வெளிவந்த தகவல் வதந்தி என்றும்,எனக்கு திருமண ஏற்பாடுகள் எதுவும் நடக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் நான் தனியாகவே வசித்து வருவதாகவும் ,எனது திருமணம் எப்போது நடந்தாலும் திருவிழா போன்று கொண்டாடப்படும் என்று கூறி அவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் பல படங்களில் நடித்து வருவதாகவும் கூறியுள்ளார்.இதிலிருந்து இவர் காதலிப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை என்பது உறுதியாகி உள்ளது ‌.