கே.ஜி.எஃப் படத்தில் ராக்கி பாய் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..?

கே.ஜி.எஃப் படத்தில் முதலில் நடிகர் பிரபாஸ் தான் நடிக்கவிருந்தது தகவல்.

மிகவும் சிறந்த கேங்க் ஸ்டார் திரைப்படங்களில் ஒன்று கே.ஜி.எஃப். இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நடிகர் யாஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தார். சிறப்பான மியூசிக் மற்றும் அதிரடி சண்டைக்காட்சிகளுடன் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி வெளியானது. வெளியாகி இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 250 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்திற்கான இரண்டாவது பாகம் வருகின்ற ஜூலை 16 ஆம் தேதி உலகம் முழுவது வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த கே.ஜி.எஃப் திரைப்படத்தில் முதன் முதலாக நடிக்கவிருந்த நடிகர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி பரவு வருகிறது, ஆம் முதன் முதலாக இந்த படத்தின் கதையை நடிகர் பிரபாஷிர்க்காக தான் எழுதப்பட்டதாம் ஆனால், சில காரணங்களால் இவரால் நடிக்கமுடியாமல் போகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.