இந்தியா கிரிக்கெட் அணியின் சூப்பர் ஜோடி யார் தெரியுமா.? இர்பான் பதான் ஓபன் டாக்..!

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஜோடி ஷிகர் தவான் மற்றும் ரோஹித்

By bala | Published: Jun 30, 2020 03:08 PM

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஜோடி ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா என்று இந்திய அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் இர்பான் பதான் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்ற நிலையில், கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் இர்பான் பதான் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் பற்றி ஒரு பேட்டியில் புகழ்ந்து கூறியுள்ளார்.

அதில் அவர் கூறியது " ஷிகர் தவான் எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் நன்றாக நேரம் எடுத்து தேவையான ரன்களை குவிப்பார், இதனால் ரோஹித் சர்மா சிறிது ரிலாக்ஸ் செய்து ஆடுவார், ஆனால் திடீரென ரோஹித் சர்மா அதிரடியில் இறங்கிவிடுவார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

மேலும் அடுத்ததாக பேசிய இர்பான் பதான் ரோஹித் சர்மா சிறிது நேரம் எடுத்து தான் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார், இது ஷிகர் தாவானிற்கு நன்றாக தெரியும், இருவரும் தங்களுக்குள் புரிந்து கொண்டு விளையாடுவார்கள் அதனால்தான் இந்தியாவின் சூப்பர் ஜோடியாக திகழ்கிறார்கள் என்றும் இர்பான் பதான் கூறியுள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc