38 C
Chennai
Sunday, June 4, 2023

Spam call தொல்லை: அதிரடி காட்டிய TRAI…2 மாதத்தில் வருகிறது ‘DCA’ டிஜிட்டல் தளம்.!

ஸ்பேம் கால் மற்றும் தொல்லை தரும் குறுஞ்செய்திகளைக் கட்டுப்படுத்துவதற்காக,...

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்.!!

வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழகத்தின் சில மாவட்டங்களில்...

தளபதி 68 படத்திற்கு இசையமைப்பாளர் யார் தெரியுமா..? முதல் முறையாக வெங்கட் பிரபுவுடன் இணையும் அந்த பிரபலம்.!!

நடிகர் விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக அவர் நடிக்க உள்ள 68 வது திரைப்படத்திற்கான தகவல்கள் கடந்து சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அது என்னவென்றால், விஜயின் 68வது திரைப்படத்தை பிரபல இயக்குனரான வெங்கட் பிரபு இயக்குவதாகவும்,  அந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.

Thalapathy68
Thalapathy68 [Image source : twitter/ @senthil18701]
இன்னும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. மேலும் வழக்கமாக வெங்கட் பிரபு இயக்கம் படங்களுக்கு இசையமைப்பாளர்  யுவன் சங்கர் ராஜா தான் இசையமைப்பார். ஆனால் தற்போது வெங்கட் பிரபு விஜய் வைத்து இயக்கும் அவருடைய 68-வது திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியவும் வெளியாகி உள்ளது.

Thalapathy68
Thalapathy68 [Image Source : Twitter/ @Hisrath95]
நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு விஜய்-யுவன் கூட்டணி இணையப்போகிறது என காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இருப்பினும் இந்த தகவல் இன்னும் உறுதியாகவில்லை. படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் போது இசையமைப்பாளர் யார் என்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஏற்கனவே முன்னதாக ஒரு விழாவில் பேசிய இயக்குனர் வெங்கட் பிரபு அனிருத் உடன் வேலை செய்ய தனக்கு ஆசையாக இருப்பதாகவும் அவருடைய இசை தனக்கு பிடித்ததாகவும் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.