38 C
Chennai
Sunday, June 4, 2023

WTCFinal2023 : இதே மைதானத்தில் கடைசியாக ‘ஹிட்மேன் ‘செய்த தரமான சம்பவம்…ட்ரெண்ட் ஆகும் வீடியோ.!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் (ஜூன்) 7-ஆம்...

அயர்லாந்துக்கு எதிராக இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் படைத்த வினோத சாதனை.!

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பேட்டிங், பவுலிங், விக்கெட்...

புதுச்சேரியில் வெயில் அதிகரிக்கும்…மிதமான மழை பெய்யும்…சென்னை வானிலை மையம் எச்சரிக்கை.!!

புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், வெப்ப...

மஜாபா..மஜாபா..”லியோ” படத்தில் விஜய்க்கு மகனாக நடிப்பது யார் தெரியுமா..??

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “லியோ” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை பார்க்க இந்திய சினிமாவே மிகவும்  எதிர்பார்ப்புடன் காத்துள்ளது என்று கூறலாம். கண்டிப்பாக படம் விஜய் சினிமாக்கு அருகில் அதிக வசூல் கொடுக்கப் போகும் படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

LEO MOVIE
LEO MOVIE [Image Source -Twitter/@JDALEXtweets]
இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடிக்கடி இந்த திரைப்படம் குறித்த லேட்டஸ்ட் ஆன தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், நேற்று கூட படத்தில் எத்தனை பாடல்கள் இருந்தது கிட்டத்தட்ட மூன்று பாடல்கள் இருப்பதாகவும், அந்த மூன்று பாடல்களையும் அனிருத் சிறப்பாக இசையமைத்துள்ளதாகவும் தகவல்கள் பரவியது.

LEO
LEO [Image Source -Twitter/@LeoOfficiaI
]
அதனை தொடர்ந்து தற்பொழுது  லியோ படத்தில் விஜய்க்கு மகனாக நடிக்க உள்ள நடிகர் குறித்த தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு மகனாக நடிப்பது பிரபல மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் தான்.

எனவே, இதற்காக மேத்யூ சுத்தமாக தாடி எல்லாம் எடுத்து, ஒரு இளம் பையன்போல் நடித்து வருவதாக கூறப்படுகிறது. விஜய்க்கு அவர் மகனாக நடிக்கும் தகவலை அறிந்த ரசிகர்கள் செம மாஸ் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதேபோல் படத்தில் இயல் என்ற கேரக்டரை இயக்குநர் லோகேஷ் சஸ்பென்சாக வைத்துள்ளாரம் எனவும் தகவல்கள் பரவி வருகிறது.