வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அப்டேட் எப்போது தெரியுமா..?

வலிமை படகின் ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் எப்போது வெளியாகும் என்ற தேதி பிப்ரவரி 25 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது .

இந்த நிலையில் தற்போது அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த வலிமை படம் குறித்த அப்டேட்டை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் கடந்த 15 ஆம் தேதி அறிவித்தார். வலிமை படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டத்திலிருந்து ஒரு அப்டேட் கூட விடாததால் கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் போன்றவர்களிடம் வலிமை அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் வந்தனர். அதனை தொடர்ந்து நடிகர் அஜித் வருத்தத்துடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதன் பிறகு அவரது ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்காமல் வரவேண்டிய நேரத்தில் சரியாக வரும் என்று காத்துள்ளார்கள். இந்த நிலையில் தற்போது இதனை தொடர்ந்து வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் எப்போது வெளியாகும் என்ற தேதி பிப்ரவரி 25 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.