புஷ்பா 2 டீசர் எப்போது வெளியாகிறது தெரியுமா..? செம மாஸ் அப்டேட் இதோ.!

புஷ்பா படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில், தற்போது இரண்டாவது பாகம் விறு விறுப்பாக தயாராகி வருகிறது. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில்  உருவாகி வரும் இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா பஹத் பாசில், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

Pushpa 2
Pushpa 2 Image Source Twitter

முதல் பாகத்தை விட புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்தை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்கான பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக களமிறங்கி வேலை செய்து வருகிறார்கள். எனவே படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் அருமையாக எடுத்து வருகிறார்கள். படப்பிடிப்பு முடிந்த பிறகு ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Pushpa 2 Rashmika
Pushpa 2 Rashmika Image Source Google

இந்த நிலையில், தற்போது புஷ்பா-2 திரைப்படத்தின் 3 நிமிட அதிரடி டீசர் எப்போது வெளியாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி,  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புஷ்பாவின்3 நிமிட ஆக்‌ஷன் கட் டீஸர் அல்லு அர்ஜுன் பிறந்தநாளான ஏப்ரல் 8 -ஆம் தேதி தேதி வெளியாகிறது.

Pushpa 2
Pushpa 2 Image Source Twitter

ஏற்கனவே, டீசர் கட் வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டதாகவும், பின்னணி  இசை வேலைகள் தற்போது நடைபெற்று மும்மரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.விரைவில் டீசர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment