அடிக்கடி உணவுடன் மீனை சேர்த்து கொள்வதால் என்ன நடக்கும் தெரியுமா?

கடல் உணவாகிய மீன் பிடிக்காதவர்கள் சொற்பமானவர்கள் தான் இருப்பார்கள். சிலருக்கு மீன் மிகவும் பிடிக்கும், இல்லாவிட்டால் உணவே சாப்பிட பிடிக்காது அந்தளவு மீனை விரும்புபவர்களும் உள்ளனர். ஆனால், எதிலும் அளவுக்கு மீறினால் நஞ்சு தான். மீனை அளவுடன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அளவுக்கு மீறுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

தற்பொழுதைய காலத்தில் அதிகம் இறப்புகள் புற்றுநோயால் தான் வருகிறது. ஆனால், நாம் மீனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளும் போது பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் மிக குறைவே என ஒரு ஆய்வின் முடிவில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த மீன்களில் அதிகளவு ஒமேகா 3 கொழுப்பு காரணமாக உடலில் உள்ள கெட்ட நச்சுக்கள் வெளியேறவும் உதவுகிறது. இந்த அமிலம் தான் புற்றுநோய்களின் வீரியத்தையும் குறைகிறது. மேலும், பொரித்த மீன்களை தவிர்த்து குழம்பு வைத்து மீன்களை சாப்பிடும் போது உடலிலுள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கும் தன்மையையும் அதிகம் கொண்டுள்ளதாம். உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுவதுடன், பாலூட்டும் தாய்களுக்கும் நல்ல சத்துக்களை கொடுப்பதுடன், மன அழுத்தம் வராமலும் பாதுகாக்கிறது.

மீன் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்

மீனை சாப்பிடுவதால் உடலுக்கு எவ்வளவு நன்மைகளும் சத்துக்களும் உள்ளதோ அதே அளவுக்கு தீமைகளும் உள்ளது. அதிகளவில் மீனை எடுத்துக்கொள்ளும் போது சில கெட்ட கொழுப்புகள் தங்குவதற்கும் காரணமாக அமைகிறது. ஆஸ்துமா, குடல் கட்டிகள் மற்றும் சோர்வு ஏற்படுவதற்கு மீனை அதிகளவு சாப்பிடுவது காரணமாகிறது. பொதுவாக ஏற்றுமதி செய்யப்படக்கூடிய மீன்களை தான் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சுறா, வாள் ஆகியவற்றில் தான் அதிகம் நச்சுத்தன்மை இருக்குமாம். வைட்டமின், ஒமேகா மற்றும் பல புரத சத்துக்கள் நிறைந்த மீன்களை அளவுடன் உட்கொள்வோம், ஆபத்திலிருந்து மீள்வோம்.

author avatar
Rebekal