ஹன்சிகா மற்றும் சிம்புவின் இணைந்து நடித்துள்ள 'மஹா' படத்தின் டீசர் எப்போது தெரியுமா.!

வாலு படத்திற்கு பிறகு சிம்பு மற்றும் ஹன்சிகா இணைந்து நடித்துள்ள

By ragi | Published: Jul 12, 2020 11:56 AM

வாலு படத்திற்கு பிறகு சிம்பு மற்றும் ஹன்சிகா இணைந்து நடித்துள்ள மஹா படத்தின் டீசர் ஆகஸ்டில் வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

நடிகை, ஹன்சிகா தற்போது நடித்து வரும் திரைப்படம் மஹா. இது ஒரு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாம். இந்த படம் ஹன்சிகாவின் 50வது படமாகும். இந்த படத்தில் சாயாசிங், நாசர், கருணாகரன் தம்பி ராமையா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்த படத்தை ஜமீல் இயக்குகிறார். இவர் ரோமியோ ஜூலியட் படத்தை இயக்கிய லட்சுமணனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.மேலும் ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தை எட்செட்ரா என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. . இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் அண்மையில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் ஹன்சிகா காவி உடை அணிந்து புகைப்பிடிப்பது போல் உள்ள தோற்றமாகும்.

வாலு படத்திற்கு பின் சிம்பு மற்றும் ஹன்சிகா இணைந்து நடிக்கும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்புவின் போஸ்ட்ர் அண்மையில் வெளியாகி, அதில் அவர் விமானியாக நடிக்கவிருக்கிறார். சிம்புவின் கதாபாத்திரம் கோவாவை சேர்ந்த ஒரு விமானியின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டதாகும். நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் விக்ரம் ஆகியோர் போலீஸ் கமிஷனர் வேடத்தில் நடிக்கிறார். அதனையடுத்து மகத் மற்றும் சனம் ஷெட்டி ஆகியோர் இந்த படக்குழுவினருடன் புதிதாக இணைந்துள்ளார்கள். ஏற்கனவே சிம்புவின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாகவும், ஹன்சிகா மற்றும் ஸ்ரீகாந்த் அவர்களின் ஒரு சில காட்சிகள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் தயாரிப்பாளர் மதியழகன் அளித்த பேட்டியில், மஹா படத்தின் டீசர் ஆகஸ்டில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். மீண்டும் இணையும் இந்த ஜோடியை ஸ்கிரீனில் பார்க்க ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Step2: Place in ads Display sections

unicc