பள்ளிகளை திறப்பு குறித்து பெற்றோர்களின் கருத்து என்ன தெரியுமா.?

கொரோனா தொற்று நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெரும்பான்மையான பெற்றோர்கள் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பதை எதிர்க்கின்றனர்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில் கடந்த சில ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.மேலும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 10-12 வகுப்புகள் மற்றும் 6-9 வகுப்புகள் 15 நாள் இடைவெளியுடன் திறப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக செப்டம்பர் 1 முதல் பள்ளிகளைத் திறக்க அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருந்தாலும் பள்ளிகளைத் திறக்க அவகாசம் எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்று அரசாங்கம் நேற்று தெரிவித்தது. கொரோனா நிலைமை பொறுத்து தான் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவெடுக்க முடியும் என்று மத்திய அரசு வலியுறுத்தியது.

அறிக்கைகளைத் தொடர்ந்து ஒரு மாதத்திற்குள் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து அவர்கள் எப்படி உணருகிறார்கள் என்று பெற்றோர்கள் கூற்று குறித்து ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. இந்த கணக்கெடுப்பு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெற்றோர்கள் மற்றும் தாத்தா பாட்டிகளிடமிருந்து 30,000 க்கும் மேற்பட்ட பதில்கள் என்னவென்றால்.

அதில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கேட்கப்பட்டபோது பதிலளித்தவர்களில் 58 சதவீதம் பேர் ‘இல்லை’ என்றும் 33 சதவீதம் பேர் மட்டுமே ‘ஆம்’ என்றும் பதிலளித்தனர்.

செப்டம்பர் 1 முதல் இந்தியாவில் உள்ள பள்ளிகளை அவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்பதற்கான காரணம் குறித்து கேட்கப்பட்டபோது பெற்றோர்கள் கூறுகையில் குடும்பத்தில் ஒரு குழந்தை நோய்த்தொற்று ஏற்பட்டால் குடும்பத்தில் மூத்தவர்களுக்கு கடுமையான ஆபத்தாக மாறிவிடும் என்று கூறினார்கள்.

இதற்கிடையில் பள்ளிகளில் சமூக விலகல் என்பது சாத்தியமில்லை என்று 9 சதவீதம் பேர் கூறியுள்ளனர். பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டால் கொரோனா தொற்று பரவுதல் இன்னும் அதி வேகமாக அதிகரிக்கும் என்று 5 சதவீதம் பேர் கூறியுள்ளனர். மேலும் 2 சதவீதம் பேர் ஆன்லைன் கல்வி நிலைமைக்கு ஒரு நல்ல மாற்றாக இருப்பதாக நம்புகிறார்கள்.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.