புரோட்டீன் அதிகமுள்ள பன்னீரின் மருத்துவ குணங்கள் தெரியுமா?

பன்னீர் பார்க்கவே சாப்பிட தோன்றும் ஒன்று தான். இது சுவையில் மட்டுமல்லாமல் மருத்துவ குணங்களும் அதிகம் நிறைந்த உணவு. இதனை பற்றி இன்று அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

பன்னீரின் மருத்துவ குணங்கள்

பன்னீரில் அதிகளவு ஓமெகா 3, ஒமேகா 6, புரோட்டீன் ஆகிய சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. கர்ப்பிணிகள் இந்த பன்னீரை அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். 100 கிராம் பன்னீரில் மட்டும் 18 கிராம் புரோட்டீன் உள்ளது. மூட்டு வலி உள்ளவர்கள் இதனை அதிகம் எடுத்து கொள்ளலாம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதனை நிச்சயம் தினமும் உட்கொள்ளலாம். இதிலுள்ள புரோட்டீன் காரணமாக பசியை குறைக்க உதவும்.

கால்சியம் இதில் அதிகம் உள்ளதால் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவுவதுடன், எலும்பு மண்டலம் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது. இதிலுள்ள வைட்டமின்கள் காரணமாக சருமம் முக பொலிவை அள்ளி கொடுக்கிறது. ஹீமோகுளோபின் அதிகமுள்ளதால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகம் அளிக்கிறது. உடலின் இரத்தத்தை சீராக வைக்கவும் உதவுகிறது.