அட்டகாசமான வெண்ணெய் புட்டு செய்வது எப்படி தெரியுமா…?

அட்டகாசமான வெண்ணெய் புட்டு செய்வது எப்படி தெரியுமா…?

காலை நேரத்தில் ஏதாவது தினமும் வித்தியாசமானதாக செய்து சாப்பிடுவது பலருக்கும் பிடிக்கும். அதற்காக தினமும் இட்லி, தோசை, சப்பாத்தி என செய்ததையே செய்து சாப்பிடுவதற்கு பதிலாக, புதிதாக ஏதாவது ஒன்று செய்தால் வீட்டில் உள்ள அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். இன்று எப்படி வெண்ணெய் புட்டு செய்வது என்பது குறித்து நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • புழுங்கல் அரிசி
  • கடலைப்பருப்பு
  • வெல்லம்
  • தேங்காய்த் துருவல்
  • முந்திரி
  • ஏலக்காய்
  • நெய்
  • உப்பு

செய்முறை

அரைக்க : முதலில் புழுங்கல் அரிசி 2 கப் எடுத்து இரண்டு மணி நேரம் நன்றாக ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். அதன் பின்பு இதை நைஸாக அரைத்துக் கொள்ளவும். அது போல கடலை பருப்பை ஊறவைத்து அவித்து கொள்ளவும்.

கலவை : ஒரு கப் அரிசி மாவுக்கு ஒரு கப் என்ற அளவில் நீரை கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும். அதன் பின் அரிசி மாவுடன் உப்பு சேர்த்து வெந்நீரில் மாவை கொட்டி நன்றாக கிளறவும். வெந்ததும் வேக வைத்த கடலைப்பருப்பை இதனுடன் சேர்க்கவும். அதன்பின் வெல்லப் பாகு தயாரித்து அதையும் மாவுடன் கலந்து கொள்ளவும்.

புட்டு : நெய்யில் முந்திரி மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கிளறவும். அதனுடன் நாம் கிளறி வைத்துள்ள மாவையும் சேர்த்து, சிறிதளவு ஏலக்காய் சேர்த்து கெட்டியாக வரும் வரை நன்கு கிளறவும். வெண்ணெய் போல திரண்டு வந்ததும், ஒரு தட்டில் போட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுக்கவும். அவ்வளவுதான் அட்டகாசமான வெண்ணெய் புட்டு தயார்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube