சுவையான கடலை மாவு காராபூந்தி செய்வது எப்படி தெரியுமா?

நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான உணவு பொருட்களை உண்கிறோம். தினமும் காலையிலும், மாலையிலும் தேநீருடன் சேர்த்து பல விதவிதமான உணவுகளை  உண்றோம். அதற்காக நாம் பணத்தை செலவழிக்காமல், நாமே செய்து சாப்பிடுவது சிறந்தது.

தற்போது இந்த பதிவில், சுவையான கடலைமாவு காராபூந்தி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • கடலை மாவு – 2 கப்
  • அரிசி மாவு – ஒரு கப்
  • ஃபுட் கலர் – தேவைக்கேற்ப
  • வேர்க்கடலை – அரை கப்
  • முந்திரி – ஒரு டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – ஒரு கொத்து
  • மிளகாய்தூள் –  2 டீஸ்பூன்
  • எண்ணெய் – தேவைக்கேற்ப
  • உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் கறிவேப்பிலையை பொறித்து வைத்துக் கொள்ள வேண்டும். கடலைமாவு, அரிசி மாவு இரண்டையும் ஒன்றாக கலந்து, மூன்று பவுல்களில் பிரித்து வைக்க வேண்டும். பின் ஒன்றில் ஆரஞ்சு, இன்னொன்றில் பச்சை என புட் கலரை சேர்த்து கலக்க வேண்டும். மூன்றாவது கிணத்தில் கலர் எதுவும் சேர்க்க கூடாது.

பின்னர் ஒவ்வொரு கிண்ணத்திலிருக்கும் மாவையும் பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்க வேண்டும். பின் வாணலியில், எண்ணெய் ஊற்றி காய வைத்து, ஒவ்வொரு கலர் மாவையும் பூந்தி கரண்டியில் தேய்த்து பொறித்து எடுக்க வேண்டும்.

பின் அகலமான தட்டில் பூந்தியை கொட்டி, வறுத்த வேர்க்கடலை, முந்திரியை சேர்த்து, பொரித்த கறிவேப்பிலை, உப்பு, மிளகாய்தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்கினால், சுவையான கடலை மாவு காராபூந்தி தயார்.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.