பரங்கிக்காய் பச்சடி செய்வது எப்படி என்பதை பற்றி அறிவீரா

பரங்கிக்காய் பச்சடி மிகவும் ஆரோக்கியமான உணவு. இது நமது உடலுக்கு மிகவும் நல்லது.

  • பரங்கிக்காய் பச்சடி செய்வது எப்படி என்பதை பற்றி அறிவீரா?

பரங்கிக்காய் பச்சடி செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.

தேவையான பொருட்கள்

பரங்கிக்காய் – ஒரு கப் (தோல் நீக்கி பொடியாக நறுக்கியது)

எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்

மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்

மிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

வெல்லம் – 2 டீஸ்பூன்

கொத்தமல்லி – சிறிதளவு

புளி-சிறிதளவு

கடுகு – ஒரு டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன்

செய்முறை :

ஒரு குக்கரில் பரங்கிக்காய் , மஞ்சள் ,பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு 3 விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து என்னை ஊற்றி காய்ந்ததும் கடுகு ,உளுத்தம் பருப்பு ,கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.

பின்பு வேகவைத்து எடுத்து வைத்த பரங்கிக்காய் ,வெல்லம் சேர்க்கவும்.பின்னர் புளியைக்கட்டியாக கரைத்து சேர்க்கவும்.இதனை 5 நிமிடங்கள் நமக்கு கொதிக்க விடவும்.

பரங்கிக்காய் நன்கு மசிந்து வந்தவுடன் கொத்தமல்லி தழைகளை  தூவி இறக்கவும்.இப்போது சூடான பரங்கிக்காய் பச்சடி ரெடி.

 

 

 

Leave a Comment