இரவில் தூங்கும் பொழுது திராட்சை பழம் சாப்பிட்டால் என்ன நன்மை தெரியுமா..?

இரவில் திராட்சை பழம்  சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.

By bala | Published: Jul 04, 2020 06:57 PM

இரவில் திராட்சை பழம்  சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.

குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பழம் என்றே கூறலாம், இதில் வைட்டமின் B1 வைட்டமின் B2 மற்றும் வைட்டமின் B3 அதிகளவில் உள்ளது. மேலும் வைட்டமின் C இரும்புசத்தும் பாஸ்பரஸ் சத்தும் அதிகமாகவுள்ளது. இந்த நிலையில் திராட்சை பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

நன்மைகள்:

உடல் வறட்சி பித்தம் இருப்பவர்கள் திராட்சை பழம் அதிகமாக சாப்பிடலாம், இரவு தூக்கும் முன்பு இந்த திராட்சை பழத்தை அதிகம் சாப்பிடுவதால் உடல் வறட்சி நீங்கி பித்தம் பிரச்னையை போக்கும் மேலும் ரத்தம் சுத்தமாகி செரிமானக் கோளாறுகளை அகற்றும்.

இதயம் பலவீனமானவர்கள் இந்த திராட்சை பழத்தை பண்ணிரீல் ஊறவைத்து சூடான நீரில் திராட்சை பழத்தை பிசைந்து இரவில் சாப்பிட்டு வந்தால் இதயம் வலிமையாகும். மேலும் படபடப்பு இருப்பவர்கள் சாப்பிட்டால் மிகவும் நன்மை.

இந்த திராட்சை பழத்தை இரவில் மிளகில் அரைத்து குடித்தால் கல் அடைப்பு நீங்கும் மேலும் இதை இரண்டு வேலை அருந்தி வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் குறையும், மேலும் குழந்தைகள் சாப்பிட்டால் குடல் புன் குணமாகும். உடல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

குழந்தைகளுக்கு தொடந்து இந்த திராட்சை பழத்தை கொடுத்து வந்தால் நன்றாக தூக்கமின்மை பிரச்சனை தீரும், பெண்களுக்கு ஏற்படும் மாதவவிடாய் பிரச்சனையும் நீங்கும் என்றே கூறலாம்.

Step2: Place in ads Display sections

unicc