இதுவரை “மாஸ்டர்” திரைப்படம் மொத்தமாக எத்தனை கோடி வசூல் தெரியுமா…?

விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் உலகளவில் 253 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படம் மாஸ்டர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்திருந்தார். ஆண்ட்ரியா, கௌரி கிஷன், அர்ஜுன் தாஸ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். வெளியான நாட்களில் இருந்து தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. நல்ல வசூல் சாதனை மற்றும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது மாஸ்டர் திரைப்படம் இதுவரை மொத்தமாக உலகளவில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. ஆம் உலகளவில் மாஸ்டர் திரைப்படம் 253 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.